Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 13 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
திருகோணமலை ப.நோ.கூ.சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரால் இடைநிறுத்தப்பட்டிருந்த ஆர்.தயாளன் தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையுத்தரவை இடைநிறுத்தக் கோரி திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதி, ஆர்.தயாளனின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
ஆனாலும் ஆர்.தயாளனினால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இது தொடர்பில் பூர்வாங்க விசாரணை மேற்கொள்ளும் முகமாக எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
அன்றையதினம் கிழக்கு மாகாண ஆணையாளர் உட்பட 25 பிரதிவாதிகளையும் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago