2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிண்ணியாவில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 23 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா பிரதேசத்தின் சின்னக்கிண்ணியா கிராம சேவை உத்தியோகத்தார் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியா இல்- அகஸா கல்லூரியில் அதிபர் ஏ.ஆர்.எம்.உபைத்துல்லா தலைமையில் இடம்பெற்றது.

இதில் கிண்ணியா பிரதேசத்தில் தற்போது பெய்து வரும் அடைமழையால் மழை நீர் தேங்கி நிற்பதை வெளியேற்றுவது தொடர்பாகவும், இப்பிரதேசத்தில் தற்போது நுளம்புகள் பெருக்கெடுத்திருப்பதாகவும் டெங்கு நோய் பரவுதாகவும் இதனை கட்டுப்படுத்துவது தொடர்பாவும், அல்- அக்ஸா கல்லூரி ஒவ்வொரு முறை மழை நீர் தேங்கி நிற்பதால் இங்குள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்பப்படுவதால் இந்நீர் வழிந்தோடுவதற்கான வடிகாண் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த வைபவத்தில் கிண்ணியா பொலிஸ் பொறுப்பதிகாரி பாலம கும்புற, உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி முகம்மது ராபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X