2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தையல் பயிற்சி பெற்ற யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை இக்பால் நகர் பிரதேசத்தில் முறைசாராக்கல்விப் பிரிவின் அனுசரனையுடன் தையல் பயிற்சி பெற்ற யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும்  நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

சமாதான மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான அமைப்பின் தலைவர் எம்.பி.எம்.நஜ்முதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கே.முருகுப்பிள்ளை, திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.எல்.றபாய்தீன், குச்சவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி முகதீன் தமீம், முறைசாராக்கல்விப் பிரிவு உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.தவநாதன் மௌலவி முக்சீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, தையல் பயிற்சி பெற்று வெளியேறிய 35 யுவதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X