2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வலுவிழந்தோருக்கான வாழ்வாதார உதவிகள்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.பரீட்)

கடந்த காலப்பகுதியில் யுத்தத்தினாலும் மிதிவெடியினாலும் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 7 பயனாளிகளுக்கு அவர்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக வாழ்வாதார செயற்பாட்டிற்கான உதவிகள் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்வு, திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் திட்ட உத்தியோகஸ்தர் பே.மரியநாயகம், கதிரமலைவாகனன், நிஸ்மி, குமரன், செல்வி கௌசல்யா ஆகியோர் பங்குபற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X