2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இளைஞர் யுவதிகளுக்கான உளசமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

Kogilavani   / 2011 டிசெம்பர் 29 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவன சுகாதார உளசமூக பிரிவினரால் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு உளசமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

பிரிவின் இணைப்பாளர் கு.பிரகலாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் டயஸ் , நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் ஜி.ஏ.பிரான்சிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கருத்தரங்கில் வளவாளராக உளவள துணையாளர் எஸ்.சதீஷ்குமார் கலந்துகொண்டு நட்புறவாடுதல், செவிமடுத்தல், இரகசியத்தன்மை, நம்பிக்கை, எதிர்த்து வாதிடும் திறன், மதிப்பளித்தல், ஒத்துணர்வு போன்றவற்றிற்கு விளக்கம் அழித்ததுடன், பங்கு பற்றியவர்களின் பிரச்சினைகள் சிலவற்றையும் முன்வைத்து அதற்கான ஆலோசனைகளையும் கூறினார்.

இந்நிகழ்வால்  சுமார் 72 இளைஞர் யுவதிகளுகள்  பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X