2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சம்பூர் பிரதேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் விஜயம்

Super User   / 2011 டிசெம்பர் 30 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன், கஜன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று வியாழக்கிழமை சம்பூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இதன்போது, இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள அகதி குடும்பங்களை பார்வையிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பிரதேச இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை அதிகாரிகளுடனேயே இரா. சம்பந்தன் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களுடன் கலந்துரையாடினார். நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுடன் முன்னாள் திருமலை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெத்தினசிங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்;டமைப்பின் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களும் சென்றிருந்தனர்.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் ஆகியோர் விரைவில் விரைவில் சம்பூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு செய்து, இந்திய உதவியுடன் அமையவுள்ள
அனல் மின் நிலையத்திற்கான காணிகளை பார்வையிட உள்ளனர்.

அதற்கு முன்னார் நான் இங்கு வந்து குறித்த காணிகளை பார்வையிட்டதாக சம்பந்தன் தெரிவித்தார். அனல் மின் நிலையத்திற்கு தேவைப்படாத காணிகளில் மக்கள் விரைவில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் தைப்பொங்கலுக்கு பின்னர் இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X