2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருமலையில் துப்பாக்கி பிரயோகம்; வர்த்தகர் படுகாயம்

Super User   / 2012 ஜனவரி 03 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை விகாரை வீதியில் இன்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவத்தில் உல்லாச ஹோட்டலொன்றின் உரிமையாளர் ஒருவர்  கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் திருமலை பொதுவைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்ற மேற்படி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 42 வயதான க. ராஜகோபால் என்பவரே படுகாயமடைந்தவர் ஆவார்.

அவர் மேற்படி ஹோட்டலிலிருந்து விகாரை வீதி வழியாக தனது மற்றொரு நிறுவனமான எரிபொருள் நிலையமொன்றை நோக்கி வாகனத்தில் வரும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (படங்கள் - அமதோரு அமரஜீவ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X