Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 11 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
முறாசில்)
மூதூர் பிரதேச அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று புதன்கிழமை மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தலைமையில் மூதூர் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலுடன் இடம்பெற்ற இவ்வொருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரதேசத்திலுள்ள அரச அலுவலகங்களின் பிரதம அதிகாரிகளோடு அரச சார்பற்ற பொதுநல அமைப்புக்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக கூட்டத்தில் விபரிக்கப்பட்டது.
இதேவேளை, மூதூர் அரபா நகரிலிருந்து 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து அகதியாக வாழும் பல குடும்பங்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படாமை குறித்தும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட 90ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படாமை குறித்தும் நாடாளுமன்ற உருப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பலத்தரப்பினரதும் கருத்துக்களை கவனத்திற் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் இப்பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
28 minute ago