2025 மே 03, சனிக்கிழமை

கந்தளாயில் கண் வைத்திய முகாம்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அல்-முஸ்லிமாத் அமைப்பின் அணுசரணையில் கண்வில்லைகள் பொருத்தும் வைத்திய முகாம் கந்தளாய் தள வைத்தியசாலையில் கந்தளாய் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியகட்சகர் வைத்தியர் கொஸ்தா தலைமையில் இடம் பெற்றது.

இதில் கண்வைத்திய நிபுனர் ரோகண எதிரிசிங்ஹ மற்றும் அல்-முஸ்லிமாத் அமைப்பின் தொண்டராகவும் ரெக்டோ அமைப்பின் தலைவராகவும் செயற்படும் ஜெய்னுலாப்தீன் முகம்மட் அஸார் உட்பட ஏனைய வைத்தியர்கள், தாதிமார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது 125 கண் வில்லைகள் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டு உடனடியாக 20 நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வரும் அல்-முஸ்லிமாத் அமைப்பின் சேவைகளில் ஒரு கட்டமாகவே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய கந்தளாய் தள வைத்தியசாலை மருத்துவ அத்தியகட்சகர் வைத்தியர் கொஸ்தா, 'இவ்வாறான உதவிகள் மிக அரிதாவே கிடைக்கின்றது. இவ்வாறான புதிய சிந்தனையில் சேவையாற்றுகின்ற அல்-முஸ்லிமாத் அமைப்பின் ஸ்தாபகர் கண் வைத்திய நிபுணர் மரீனா தாஹா ரிபாய்க்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் மிகவும் கஸ்ட நிலையில் தங்களது சத்திர சிகிச்சையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் இருந்த இந்த வரிய மக்களுக்கு ஒளியேற்றியதாகவும் அதற்காக தாம் மேலும் நன்றி தெரிவிப்பதாகவும்' கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X