Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 17 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
நலிவடைந்த கிராமங்களை அபிவிருத்தி செய்யும் முதலமைச்சரின் விசேட அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மொறவௌ, மாதுள்வௌ பிரிவு 01 மற்றும் மாதுள்வௌ பிரிவு 2 ஆகிய இரு கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மக்களினது விருப்பின் பேரில் கிராமத்தின் தேவைகளை முன்னிலைப்படுத்தி அவர்களினது நேரடி பங்களிப்பினோடு செயற்படுத்தப்படுகின்ற குறித்த அபிவிருத்தி திட்டத்தின் ஆரம்ப கூட்டம் மொறவௌ பன்சாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.
இப்பிரதேசத்திலுள்ள மக்களில் பெரும்பாலானவர்களினது அடிப்படை தேவைகள் மற்றும் உடனடித் தேவைகள் எவை என ஆராயப்பட்டு அதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கான உத்தரவினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உரிய அதிகாரிகளுக்கு வழங்கினார். சுமார் ஒரு கோடி ரூபாய் இவ்வபிவிருத்தி திட்டத்திற்கு முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆரியவதி கலபதி, காமினி, முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி எஸ்.அமலநாதன், கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் அருந்தவராஜா, மொறவௌ பிரதேச செயலாளர், கிராம சேவை உத்தியோகஸ்த்தர் மற்றும் கிராமிய பொது அமைப்புக்கள் பலரும் கலந்து கொண்டதாக முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago