2025 மே 03, சனிக்கிழமை

பெரும்போக நெல் அறுவடை

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 19 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தில் இவ்வருடத்திற்கான பெரும்போக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தம்பலகாமம், கந்தளாய், மூதூர், கிண்ணியா, சேருவல ஆகிய கமநல  பிரிவுகளைச் சேர்ந்த 42 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் இவ்வருடத்தில்  பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த பெரும்போக நெற்செய்கை வெள்ள அனர்த்தம் காரணமாக இப்பிரதேசங்களில் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன.
திருகோணமலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது.

இப்பிரதேசத்தில் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 25, 30 மூடைகள் விளைச்சலைக் கொடுத்துள்ளது.  தற்போது அறுவடை செய்யப்படும் நெல் மூடையொன்று  1,650 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X