2025 மே 03, சனிக்கிழமை

கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு தீரமானம்

Kogilavani   / 2012 ஜனவரி 21 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்களத்தை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மாற்றுவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக மாகாண பதில் முதலமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம கிழக்கு மாகாண மக்களுக்கு ஆற்றிய சேவைக்காக அவரை  கௌரவிக்கும் பொருட்டு திருகோணமலை மெக்கெஹெய்ஸர் விளையாட்டரங்கிற்கு வெளியில் உள்ள திறந்தவெளி மைதானத்திற்கு மொஹான் விஜயவிக்கிரம மைதானம் எனப் பெயரிடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்த்pருப்பதாகவும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X