2025 மே 03, சனிக்கிழமை

மொழிபெயர்ப்பாளர் பா.சத்தியசீலன் இனந்தெரியாதோரால் கடத்தல்

Menaka Mookandi   / 2012 ஜனவரி 22 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ)

கொழும்பு மாநகரபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் (வயது 34) என்பவர், இனந்தெரியாதோர் சிலரால் திருகோணமலையில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என்று திருகோணமலை, துறைமுகப் பொலிஸில் அவரது மனைவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் சம்பவம் நேற்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சத்தியசீலனின் மனைவியின் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு, ஒபேசேகரபுரத்தைச் சேர்ந்த சத்தியசீலன், விடுமுறைக்கு ஊருக்குச் சென்ற தனது மனைவியை அழைத்து வருவதற்காக நேற்று அதிகாலை திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.

திருகோணமலை, நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள மனைவியின் வீட்டை நோக்கிப் புறப்பட்டுக்கொண்டிருந்தபோது சந்தியொன்றில் வைத்து தன்னை சிலர் கடத்தியதாக நேற்று காலை 5.15 மணியளவில் அவர் தனது மனைவிக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

இருப்பினும் அந்த அழைப்பை அடுத்து  கணவரின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சத்தியசீலனின் மனைவியின் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் சத்தியசீலன் எந்த சந்திப் பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியாதுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0

  • Iya Sunday, 22 January 2012 05:50 PM

    இதுதான் ஆசியாவின் அதிசயம்.

    Reply : 0       0

    kundaanthady Monday, 23 January 2012 01:39 AM

    கடத்தல் , கொலை...... இதத்தான் இப்போது ஒரு ஆயுதமாக பயன்படுத்தி சிறுபான்மையினரையும் ... அவர்களுக்கு சார்பானவர்களையும் இல்லாதொழிக்க முனைகின்றனர் ... இந்த இலட்சணத்தில் ..... யாருக்கு உரிமைகளை வழங்கி என்ன பிரயோசனம் ....

    Reply : 0       0

    Ajifa Monday, 23 January 2012 02:07 PM

    இது போன்ற செய்திகள் இப்போது பேஷன் ஆகிவிட்டது நம் நாட்டில்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X