2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மூதூர் கடல் சுழியில் சிக்கிய இருவர் சடலங்களாக மீட்பு

Suganthini Ratnam   / 2012 ஜூலை 27 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}



(முறாசில்)

திருகோணமலை, மூதூர் ஹபீப் நகர் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது சுழியில் அகப்பட்டு காணாமல் போன இருவரும் சடலங்களாக இன்று வெள்ளிக்கிழமை  மீட்கப்பட்டுள்ளார்.

மூதூர் ஜாயா வீதியைச் சேர்ந்த நஸீர் முஹம்மது இர்பான் (வயது 19), மூதூர் ஜாயா நகரைச் சேர்ந்த லாபிர் முஹம்மது றிஜான் (வயது  19)  ஆகியோரே  இவ்வாறு மீட்கப்பட்டவராவர்கள்.

நேற்று வியாழக்கிழமை மாலை கடலில் குளித்துக்கொண்டிருந்த இம்மூன்று பேரும் சுழியில் அகப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ள அதேவேளை, மற்றும் இருவர் காணாமல் போயிருந்தனர்.  காணாமல் போன இவ்விருவரையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் கடற்படையினருடன் இணைந்து மீனவர்களும் ஈடுபட்டுவந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .