2025 மே 10, சனிக்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கக் கோரி பேரணி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 05 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)


பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்குமாறு கோரி திருகோணமலை, மூதூரில் பேரணியொன்று இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மூதூர் பிரதேச  பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பேரணியில் மகளிர் சங்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

மூதூர் 'திரிசீடி' சந்தியிலிருந்து மூதூர் பிரதேச செயலகம்வரை இப்பேரணி சென்றது. பேரணியில் கலந்துகொண்டவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்குமாறு கோரும் சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

பெண்களுக்கு எதிராக  வீடுகளிலும் வெளியிலும் இடம்பெற்றுவரும் வன்முறைகளை இல்லாமல்ச் செய்யுமாறு கோரும் மகஜரொன்றையும் மூதூர் பிரதேச செயலாளர் என்.பிரதீபனிடம், மூதூர் பிரதேச பெண்கள் வலையமைப்பின் தலைவி  பி.சந்திரமலர் கையளித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X