2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் முதலமைச்சர் நஜீபினால் சமர்ப்பிப்பு

Super User   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரண்டாவது கிழக்கு மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதினால் இன்று செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தவிசாளர் டபிள்யூ.ஜி.எம்.ஆரியவதி கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீதினால் 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்ட வாசிப்பை தொடர்ந்து ஆளுநர் செயலகம், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, மற்றும் மாகாண பேரவை  செயலகம் போன்றவற்றிற்கான குழுநிலை விவாதமும் வாக்கெடுப்பும் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

இதன் பின்னர் ஏனைய மாகாண அமைச்சுக்களிற்கான விவாதம் நாளை எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது. (படங்கள்:முதலமைச்சரின் ஊடக பிரிவு)   





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .