2025 மே 10, சனிக்கிழமை

திருகோணமலை இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


இலங்கை போக்குவரத்துச் சபையின் திருகோணமலை சாலை ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பணிப்புறக்கணிப்பு போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திற்கு பஸ் வண்டிகள் சகிதம் வந்த ஊழியர்கள் பஸ் சேவைகளை நடத்த மறுத்து இப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருகோணமலையில் அரச பேரூந்து சேவை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தது.

கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட திருகோணமலை - தங்காலைக்கு இடையிலான இரவு நேர சேவையில் ஈடுபடும் பஸ் வண்டியொன்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனால், தமது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும் குறைந்த கட்டணத்தில் ஈடுபடுவதால் எமது வண்டிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X