2025 மே 10, சனிக்கிழமை

வெருகலம்பதி ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சி.குருநாதன்)


சின்னக்கதிர்காமம் என்று போற்றப்படுகின்ற திருகோணமலை மாவட்டத்தின் தெற்கில் வெருகல் பிரதேசத்தில் அமைந்துள்ள வெருகலம்பதி அருள்மிகு சித்திரவேலாயுதசுவாமி கோவிலைச் சுற்றியுள்ள பிரதேசம் 4 அடி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஆலயத்தினுள் 3 அடி வெள்ளம் புகுந்துள்ளதாக ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இரா.சச்சிதானந்தன் தெரிவித்தார்.

இதன்காரணமாக ஆலயத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக வெருகல் பிரதேசம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. மக்கள் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பள்ளிக்கூடத்தில் தங்கியுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X