2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நினைவுமலர் வெளியிட இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஏற்பாடு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைவதையொட்டி நினைவுமலரொன்றை வெளியிடுவதற்கு அச்சங்கம் தீர்மானித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரவுள்ள இந்நினைவு மலரில் பிரசுரிப்பதற்கான ஆக்கங்கள், கல்வி சம்பந்தமான கட்டுரைகள் உள்ளிட்டவை கோரப்படுகின்றன.

நினைவுமலருக்கு ஆக்கங்களை அனுப்பிவைக்க விரும்புவோர் எதிர்வரும் 2013.02.28ஆம் திகதிக்கு முன்பு கிடைக்கும் வகையில் ஜெஸ்மின் எம்.மூஸா, தேசிய பொருளாளர், 522 சி, ஸம்ஸம் வீதி, மருதமுனை - 03 என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான மேலதிக விபரங்களை 077 3624690 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ள முடியுமென சங்கத்தின்  தேசியத் தலைவர் எம்.அனஸ் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .