2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திருமலை தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 06 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை தனியார் பஸ் உரிமையாளர்கள்  இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்து  தொடர்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

திருகோணமலையிலுள்ள தனியார் பஸ் கம்பனி அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு நடைபெற்றது

இது தொடர்பில் திருகோணமலை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் ஜி.ஜி.விமலசேன  தெரிவிக்கையில்,

'கடந்த சில  வாரங்களாக தனியார் பஸ்  கம்பனிக்கும் இலங்கை போக்குவரத்துச் சபையின் திருகோணமலை சாலை ஊழியர்களுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்தவண்ணமுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபையின்  சாலை முகாமையாளரின் தான்தோன்றித்தனமான  நடவடிக்கையே  இதற்கு காரணமாகும்.

திருகோணமலை நீதிமன்றத்தில் எங்கள் இரு பிரிவுக்குமிடையே  எட்டு வழக்குகள் உள்ளன. இவற்றுக்கான தீர்ப்பு 21.01.2013 க்கு பின்னர் கிடைக்கவுள்ளது.

கல்முனை, யாழ்ப்பாணம், தங்காலை போன்ற  இடங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபையால் பஸ்கள் புதிதாகவும் மேலதிகமாகவும் சேவைக்கு விடப்படுகின்றன. இதன் காரணமாக  எமது வருமானம் பாதிக்கப்படுவதோடு நஷ்டமும் ஏற்பட்டுள்ளன.  நாம் பாரிய  தொகைக்கு கேள்வி பெற்றே இச்சேவையில் ஈடுபட்டு வருகின்றோம்.

எமது சங்கத்தால் வெளியிடங்களான  வவுனியா (04), கொழும்பு (16), கண்டி (06), யாழ்ப்பாணம் (06), கல்முனை (32), தங்காலை, ஹம்பாந்தோட்டைக்கு (08)  சேவைகள் நடத்தப்படுகின்றன. அதுபோன்று உள்ளூர் சேவைகளாக புல்மோட்டை (32), கிண்ணியா மூதூர் (23), கந்தளாய் (17),  நான்காவது மைல் கல் (04), கோணேசபுரி (04), சல்லிக்கோயில் (03),  சேவைகள் நடத்தப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .