2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

திருமலையில் அமெரிக்க நிலையம்; ஒப்பந்தம் கைச்சாத்து

Menaka Mookandi   / 2013 மே 22 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்

திருகோணமலை நகரசபையின் கீழ் இயங்கும் திருகோணமலை பொது நூலகத்தில் அமைரிக்க நிலையம் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திருகோணமலை பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

திருகோணமலை நகரசபையின் தலைவருக்கும் இலங்கைக்கான அமெரிக்க நிலையத்திற்கான பணிப்பாளர் கிருஸ்கோபர் ஸ்டீல் ஆகியோருக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்டட்டது.

இளைஞர் யுவதிகளின் தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்வதற்காகவும் நூலகத்தில் வாசிப்பில் ஈடுபடுபவர்களில் அறிவு ஆற்றலை வளர்க்கும் செயற்பாடுகளும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கிடையே சமாதானத்தையும் சமத்துவத்தையும் கட்டியேழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் இந்த அமெரிக்க நிலையம் அமைக்கப்படவுள்ளது என்று கிருஸ்கோபர் ஸ்டீல் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X