2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தாருஸ் ஸலாம் வித்தியாலய புதிய கட்டட அடிக்கல் நாட்டல்

A.P.Mathan   / 2013 ஜூன் 28 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்
 
கிண்ணியா கல்வி வலயத்தில் உள்ள முள்ளிப்பொத்தானை கோட்டத்திற்கு உட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளின் ஒன்றான தி/கிண்/ தாருல் ஸலாம் வித்தியாலயத்தில் மூன்று வகுப்பறைகளுக்கான அடிகல் நாட்டுவிழா நேற்று வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில், அதிபர் எம்.எம்.மன்சூர் அலி தலைமையில் இடம்பெற்றது.
 
இப்பாடசாலைக் கட்டிடமானது கிண்ணியா விஷன் அனுசரணையினுடன் ரூம் டூ ரீட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிகழ்வில் கிண்ணியா கல்வி வலய பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி அவர்களும், ஆரம்பப்பிரிவு எம்.ஐ.நசார், கிண்ணியா விஷன் ஆரம்பகர்த்தாவான ஏ.ஆர்.எம்.சைபுல்லா, தா.ஸவாஹிர், கிண்ணியா விஷன் அணிதிரட்டுநர்கள் எம்.பீ.அப்துல்லா, எஸ்.நாஜர்ஹான மற்றும் பெற்றார்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X