2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நவிபிள்ளை திருமலைக்கும் செல்வார்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நாவுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது கிழக்கு மாகாணத்துக்கான விஜயத்தின்போது திருகோணமலைக்கும்  செல்லவுள்ளார்.

ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருக்கும்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பல்வேறு தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.

அவரது திருகோணமலை விஜயத்தின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்தித்து சமகால நிலைமைகளைப் பற்றிக் கேட்டறிந்து கொள்வார் என்று தெரிய வருகின்றது.

மட்டக்களப்பிலிருந்தும் ஒரு சாரார் திருகோணமலைக்குச் சென்று நவநீதம்பிள்ளையைச் சந்தித்து சமகால நிலைமையிலுள்ள பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறவுள்ளனர் என்றும் இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் சமூகப்பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .