2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விருந்தினர் விடுதிக்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 ஒக்டோபர் 30 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா, பெரிய கிண்ணியா பகுதியில் விருந்தினர் விடுதிக்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஒரு கோடியே 71 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கின் உதயம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதேசங்களுக்கிடையில் கிராமிய சிறு நகர அபிவிருத்தி புற நெகும திட்டத்தின் கீழ் இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல்லை கிண்ணியா நகர சபை தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப், பிரதி தவிசாளர் சட்டத்தரணி எம்.சீ.சபறுள்ளா ,கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர் ஏ.எம்.ஹினாயத்துல்லாஹ், கிண்ணியா தள வைத்தியசாலை மாவட்ட வைத்திய அதிகாரி ஏ.எச்.எம்.சமீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .