2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருமலை பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்; கிழக்கு மாகாண சபையிடம் மகஜர் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 24 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை கிழக்கு மாகாண சபைக்கு முன்வைக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (23) திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் இடம்பெற்றது.

அமரா குடும்ப தலைமை பெண்கள் ஒன்றியம் மற்றும் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கௌரவ உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்வர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதன்போது கலந்து கொண்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களிடமும் தமது பிரச்சினைகள் அவற்றுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்ட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய உறுப்பினர் அன்வர் மற்றும் ஜெனார்த்தனன் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், 'திருகோணமலை மாவட்டத்தில் 20 ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் உள்ளனர். இவர்களில் அனேகர் யுத்தம் மற்றும் இன மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களாவர். தமது வாழ்வாதாரம் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கான அன்றாடம் போராடி வருகின்றனர்.

அவ்வாறானவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகளுக்கு கிழக்கு மாகாண சபையின் தமக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும் கிழக்கு மாகாணத்தில் பூர்வீக மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக தாம் தொடர்ந்து போராடுவோம் எனவும் உறுதியளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X