2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான செயலமர்வு

Super User   / 2014 ஜனவரி 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் மூதூர் பீஸ் ஹோம் அமைப்பினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நடாத்தப்பட்ட கற்பித்தலுடனான செயற்பாடுகள் சம்பந்தமான இரண்டு நாள் செயலமர்வு  25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

பீஸ் ஹோம் அமைப்பின் தலைவர் எஸ்.எச் அமீர் தலைமையில் மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்த செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.றமீம், அந் நஹ்ழா இஸ்லாமிய சமூக ஒன்றியத்தின் தலைவர் அஷ;nஷய்க் எம்.எஸ்.எம்.சலீத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

துறைசார்ந்த நிபுணத்துவ வளவாளர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த செயலமர்வில் மூதூர் பிரதேசத்தைச் சோந்த 43 முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வின்போது மாணவர்களினது நற்குணங்களையும் நல்ல பழக்க வழக்கங்களையும் விருத்தி செய்தல், உடல் சார்பான திறன்களை விருத்தி செய்தல், தனிப்பட்ட மற்றும் சமூகம் சார்பான திறன்களை விருத்தி செய்தல், மொழி மற்றும் தொடர்பாடல் திறன்களை விருத்தி செய்தல் உள்ளிட்ட ஆறு தலைப்புக்களில் கோட்பாடு மற்றும்  பிரயோக ரீதியிலான பயிற்சிகள்  வழங்கப்பட்டன. 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X