2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அலுவலகங்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2014 ஜனவரி 29 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிழக்கு மாகாணத்திலுள்ள பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கு 105 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மோட்டார் கிரேன்டர், மூன்று பேக்கோ லோடர், மூன்று லோடர் ஆகிய இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று திருகோணமலை, வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பணிமனையில்  இடம்பெற்றது.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டதின் மூலம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்  நிதி ஒதுக்கீட்டின்; கீழ் புறநெகும வேலைத்திட்டதிற்கமையவே இந்த உபரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சமீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், மாகாண பிரதம செயலாளர் டி.எம். சரத் அபேகுணவர்தன மற்றும் முதலமைச்சரின்; செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்துகொண்டு பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர்களிடம் இயந்திர உபகரணங்களை கையளித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X