2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் தீவிபத்து: இரு கட்டடங்கள் சேதம்

Kogilavani   / 2014 மார்ச் 21 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை, அரசடி பகுதியல் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற தீவிபத்தில் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றும் அதன் அருகில் இருந்த வீடு ஒன்றும் சேதமாகியுள்ளன.

இச்சம்பவம் இடம்பெற்றதை கேள்வியுற்று ஸ்தலத்திற்கு வந்த இராணுவத்தினர் தீ அணைப்பதற்கு உதவினர். இருந்தபோதும், தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாத காரணத்தினால் தீ அணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸாhர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X