2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

திருமலை சிறைச்சாலையில் புதுவருட கொண்டாட்டம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எப். முபாரக்

தழிழ்‚ சிங்கள சித்திரைப் புத்தாண்டையிட்டு திருகோணமலை சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (20) சிறைச்சாலை கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறைச்சாலை அத்தியட்சகர் ஜே.சி.வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கைதிகளுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தலையணைச்சமர்‚ கிடுகுபின்ணுதல்‚ முட்டியுடைத்தல்‚ யானைக்கு கண் வைத்தல் உட்பட பல்வேறு பாரம்பரிய கலை கலாசார போட்டிகள் இதன்போது இடம்பெற்றன.

போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களை நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதியான கிழக்கு மாகாணசபைத் தவிசாளர் அரியவதி கலப்பதி, சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத் தலைவர், உபதலைவர் சட்டத்தரணி லாஹிர் மற்றும் நலன்புரி சங்க உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கினர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X