2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சுனாமி ஒத்திகை நாளை

Super User   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில உள்ள  சுனாமி அனர்த்த எச்சரிக்கை கோபுரம் மூலம் நாளை வியாழக்கிழமை(24) மாலை 3.00 மணிக்கு சுனாமி அனர்த்த ஒத்திகை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதுவொரு ஒத்திகையின் போது எவரும் அச்சப்பட வேண்டாமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக இம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாயல் ஒலி பெருக்கிகள் மூலமும் பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை அதிகமாக கிராம மக்களை தாங்கள் விழிப்பூட்டுவதாகவும், மற்றும் கரையோரங்களை அண்டிய பிரதேசங்களான  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளான  அண்ணல் நகர்,  பைசல் நகர், மாஞ்சோலைச் சேனை, மாஞ்சோலை, ரஹ்மானிய்யா நகர், மற்றும் மஹ்ரூப் கிராமம் ஆகிய ஆறு கிராம மக்கள் இது தொடர்பாக அச்சப்படத் தேவையில்லையென அனர்த்த முகாமைத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .