2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாவனைக்குதவாத பொருட்கள் மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு முன்னால் பல வருட காலமாக மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டு வந்த நடமாடும் கடை வியாபாரிகளின் பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்களை பொது சுகாதார பரிசோதகர்கள் புதன்கிழமை (23) பிற்பகல் மீட்டுள்ளனர்.
 
குறித்த நடமாடும் கடை வியாபாரிகள் பழவகைகள் மற்றும் உணவுப் பண்டங்கள்  பழுதடைந்து காணப்பட்ட போதிலும் தூர இடங்களில் இருந்து வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் உறவினர்களை ஏமாற்றி  விற்பனை செய்து  வருவதாக   பொது சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டது.
 
அந்த முறைபாட்டை அடுத்து நடமாடும் கடை வியாபாரிகளை பரிசோதனை செய்த போது பழுதடைந்த வடைகள் மற்றும் பழவகைகள் மீட்கப்பட்டன .
 
அத்துடன் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இரு பக்கங்களிலும் கடைகள் போடப்பட்டுள்ளதாகவும் விபத்துக்கள் அதிகளவில் இடம் பெறுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
தூர இடங்களில் இருந்து வரும் நோயாளர்களின் உறவினர்கள் நோயாளர்களுக்கும் மற்றும் சிறு குழந்தைகளுக்கும் உணவுப்பொருட்களை வழங்கும் பொது வயிற்றோட்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

எனவே நோயாளர்களின் நலன் கருதியும் சிறுவர்களின் நலன் கருதியும் பழைய பொருட்கள் விற்கப்படும் வேளை வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X