2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்க எண்மர் நியமனம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 30 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமாா்

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தென்னாபிரிக்கா மத்தியஸ்துடனான தீர்வு மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பை பெறுவது என்பவற்றோடு நாட்டின் அரசியல் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அடுத்து எதிர்நோக்கவுள்ள தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான எட்டுப்பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (30) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா சம்மந்தன் கருத்து தெரிவிக்கும் போது,

இன்று அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவானது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக சுதந்திரமாகவும் அற்பணிப்புடனும் செயற்படும். மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்படும் இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராஜா, சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயதபாணி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் உள்ளடங்குவார்கள் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .