2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவகம் மீது தாக்குதல்

Kanagaraj   / 2014 ஜூன் 21 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை கடற்படைத்தள வீதியின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள உணவகமொன்று  வெள்ளிக்கிழமை (20) உணவகத்திற்கு வந்த நபர்களால்; சேதமாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த உணவகத்தின் ஊழியர்களுக்கும் உணவகத்திற்கு உணவருந்த வந்த நபர்களுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனாலேயே குறித்த உணவகத்தின் தளபாடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த உணவக ஊழியர் ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X