2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சீனி தொழிற்சாலை இந்திய நிறுவனத்துக்கு வழங்க தீர்மானம்

Kanagaraj   / 2015 ஜூன் 24 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக அந்த நிறுவனத்தை இந்திய நிறுவனத்திடம் கையளிக்க காணி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை தீர்மானத்தை பெற்றுக்கொள்வதற்காக காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, அமைச்சரவையில் பத்திரமொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு தேவையான இயந்திரங்களை அரச முதலீடு இல்லாமல் குறித்த இந்திய நிறுவனமே கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வங்கியில் பிணையை காட்டுவதற்கும் ஒப்புகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X