2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும்: சுமந்திரன்

Gavitha   / 2015 ஜூன் 28 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் சனிக்கிழமை (27) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதில் தமிழ் மக்கள் அதிக பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். இப்பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

தமிழ் மக்களின் வெற்றிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு முக்கியமான பங்குண்டு. வேட்பாளர்கள் தெரிவு, புதியவர்களுக்கு இடம் கொடுத்தல், மற்றைய  கட்சிகளுடனான பிரதிநிதிகளின் பங்கீடு என்பன குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாவட்ட மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பிரதிநிதிகள் எடுத்துக் கூறியிருந்தார்கள். இவற்றை கவனத்தில் கொண்டே தேர்தல் வியூகங்கள் அமைக்கப்படும். மேலும் தமிழ் மக்களின் உடனடி தீர்வு பற்றியும் சர்வதேசம் எதிர்பார்ப்பு பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது என்றார்.

கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றார்.

அத்துடன், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம்  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X