2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹூஸைன்

வெருகல் பிரதேச செயலகத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை காலை காட்டு யானை தாக்கியதால், இளம்  குடும்பஸ்தர் ஒருவர்  மரணமடைந்துள்ளதாக வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

வட்டவான் கிராமத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி விஜயகுமார் (வயது 31)  என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

மீன்பிடித் தொழிலுக்காக  வீட்டிலிருந்து புறப்பட்டு திருகோணமலை – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை, யானை  விழுத்திவிட்டு தலையில் ஏறி மிதித்துள்ளது. அத்துடன், இவரின்   சைக்கிளையும் யானை நொருக்கியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சேருவில பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .