2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 15 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை, சாம்பல்தீவு பாலத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர்,  மாடொன்றுடன் மோதுண்டு  படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

வேட்புமனு கையளிப்பையொட்டி  திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக  குச்சவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த  இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், தமது கடமையை முடித்துவிட்டு  பொலிஸ் நிலையத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தபோதே  திங்கட்கிழமை (13) மாலை விபத்துக்குள்ளானார்கள்.

பதவிசிறிபுர பகுதியை சேர்ந்த ஜெயசிரி விஜயதிலக (வயது 42),  பதியத்தலாவ பகுதியை சேர்ந்த நுவன் இந்திக ஹேரத் (வயது 38) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .