Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
நாட்டில் நல்லாட்சி ஏற்படுவதற்கு முன்னரே நாம் நல்லாட்சிக்கான முன்னணியை ஏற்படுத்தி இந்நாட்டில் நல்லாட்சிக்காண பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். நல்லாட்சியினுடாக முஸ்லிம்களுக்கான தனித்துவமான உரிமைகளை பெற்றுக்கொள்ளுவதற்காகவே பாடுபட்டுக்கொண்டிருக்கின்றோம் என திருகோணமலை மாவட்ட வேட்பாளர் சாஹிர் தெரிவித்தார்.
கந்தளாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த அரசாங்கத்தில் முஸ்லிம் மக்களுக்கான எந்த உரிமைகளும் வழங்கப்பட வில்லை. அனைத்தும் மஹிந்தவின் கைகளுக்குள்ளே இருந்தது. கடந்த அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்தியது. அந்த அனைத்து நாசகார திட்டங்களும் கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இனி நல்லாட்சி திட்டங்களை வகுத்து முன்னெடுத்து செல்ல வேண்டும்.
இத்தேர்தலின் பின் அனைத்து சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும். மேலும், அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
14 minute ago
19 minute ago