Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தாம் உண்ணாவிர போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் என்.பீ.எல்.ஹேமசிறி நேற்று (18) தெரிவித்தார்.
'தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கெதிராக பல போராட்டங்கள் முன்னெடக்கப்பட்டுள்ளதுடன், அரசியல் வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே, எமது கோரிக்கைகள் நிரைவேற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க ஆலோசித்து வருகின்றோம்.
இயற்கைக்கு மாறாக சுருக்கு வலை மற்றும் டைனமட் போன்ற சட்டவிரோத மீன்பிடி முறைகளின் மூலம் சிலர் மீன்பிடியை மேற்கொள்வதினால் மீன் இனங்கள் அழிந்து போகும் நிலை ஏற்படுகின்றது' என அவர் தெரிவித்தார்.
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026