2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

2019ஆம் ஆண்டுக்கான தேசிய பொங்கல் விழா

பொன் ஆனந்தம்   / 2019 ஜனவரி 08 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இம்முறை நடைபெறும் தேசிய பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்துவதற்கு அனைத்துப் பிரிவனரும் அமைப்புக்களும் பங்களிப்பை வழங்கவேண்டுமென, தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரீபதி தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டுக்கான  தேசிய பொங்கல் விழா, தம்பலகமம், ஆதி கோணேஸ்வரர் ஆலயத்தில் இம்முறை நடைபெறவுள்ளது.

இப்பொங்கல் விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல், தம்பலகாமம் பிரதேச செயலாளர் தலைமையில், திருகோணமலை ஆதி கோணேஸ்வரா பாடசாலை மண்டபத்தில் இன்று (08 ) நடைபெற்றது.

இதில் ஆதி கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர், இளைஞர் பேரவை, இளைஞர் கழக சபையினர், தம்பலகாம பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், ஊர்த் தலைவர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் 700க்கும் அதிகமான இளைஞர்கள், தம்பலகமத்தில் ஒன்றுகூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X