2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

'21ஆம் நூற்றாண்டின் ஊடகம்' கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 ஜூலை 24 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (எம்.பரீட்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு '21ஆம் நூற்றாண்டின் ஊடகம்' எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கொன்றை நேற்று சனிக்கிழமை நடத்தியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

பிரதம அதிதிகளாக கிண்ணியா விஷன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சைபுள்ளாவும்  கிழக்கு மாகாணசபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸூம் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரி அதிபர் ஏ.ஆர்.எம்.வைத்துள்ளா, வெளிநாட்டு தூதரக அதிகாரி ஏ.எல்.எம்.லாபீர், கிண்ணியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி
எம்.எச்.எம்.சமீம், சவூதி தூதரக கணக்காளர் எம்.அப்துல் அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்று உறுப்பினர்களான எம்.எம்.நிலாம் (தினக்குரல்) எப்.எம்.பைரூஸ் (தினகரன்) ஏ.ஆர்.பரீல் (விடிவெள்ளி) றிப்தி அலி (தமிழ்மிரர் இணையத்தளம்) கலைவாதி கலீல், கிண்ணியா பிரதேச உள்ளூர் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .