2025 மே 13, செவ்வாய்க்கிழமை

28 வருடங்களின் பின்னர் வலையில் சிக்கிய அரிய வகை “வேலா”

Editorial   / 2017 நவம்பர் 12 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், தீஷான் அஹமட், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, மூதூர் கடற்பரப்பில் அரிய வகை மீன்  இனமொன்று, வலையில் பிடிபட்டுள்ளதென, மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் இருவர், நேற்று (11) மாலை சிறு தோணியில் கடலுக்குச் சென்ற வேளையிலே, இந்த அரிய வகை மீன் பிடிபட்டுள்ளது.

அப்பகுதியில் 28 வருடங்களின் பின்னர் இவ்வாறானதொரு மீன் பிடிபட்டுள்ளதெனவும், மீனவர்கள் தெரிவித்தனர்.

“வேலா” என்றழைக்கப்படும் இந்த மீன் இனம், ஐந்தடி நீளத்தையும் மூன்றரையடி அகலத்தையும் கொண்டுள்ளது.   

190 கிலோகிராம் நிறையுடைய இந்த வேலா மீன், 1 இலட்சத்தி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X