2025 மே 14, புதன்கிழமை

298 குடும்பங்களுக்கு காணி உறுதி

Ilango Bharathy   / 2021 ஜூலை 15 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட், ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை காலமும் காணி அனுமதிப்பத்திரமின்றி வசிக்கும் 298 குடும்பங்களுக்கான  காணி அனுமதிப்பத்திரங்கள் நேற்று (14) வழங்கிவைக்கப்பட்டன.



கோமரங்கடவெல மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன் அத்துக்கோராள ஆகியோரின் இணைத்தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

அடம்பனை கிராமத்தில், ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கிராமத்துடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளுள் பல நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. “நீண்டகாலமாக தாம் வசிக்கும் காணி அனுமதிப்பத்திரம்  இன்றி சிரமப்பட்டதாகவும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்
எங்களுக்கென்ற காணியுரிமை அனுமதிப்பத்திரத்தை வழங்கியமைக்காக,
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகள்” என பயனாளி ஒருவர் தெரிவித்தார்.

“தொழில் முயற்சியை ஆரம்பிப்பதற்கான கடனை வங்கிகளில் கூட பெற முடியாத நிலை உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.இனி அந்த பிரச்சினை கிடையாது. ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இதற்கும் மேலதிகமாக மக்களது வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் இதன் பிரதிபலனாக
மக்களது வருமானம் உயர்வடைந்து வாழ்க்கைத்தரம் மேம்படும்” என்றும் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .