2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

3 மாதங்களில் 27 காச நோயாளிகள்

Princiya Dixci   / 2022 மார்ச் 27 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என திருகோணமலை மாவட்ட சுவாச நோயியல் பிரிவின் வைத்தியர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், “திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 27 புதிய காச நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு 100 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், காச நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகரித்துள்ளது.

“மேலும், சுவாச நோயினால் ஏற்படும் காச நோயானது திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி, கிண்ணியா, மூதூர் மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசத்திலே அதிகளவான நோயாளிகள் இணங்காணப்பட்டுள்ளனர்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X