Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை உவர்மலையில் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘அகம்’ மனிதாபிமான வள நிலையத்தில் இருந்த ஆவணங்கள் மற்றும் சிசிரிவி கெமரா சேவர் ஆகியன திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அகம் மனிதாபிமான வள நிலையத்தின் இணைப்பாளரும் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான கண்டுமணி லவகுகராசா கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 30ம் திகதி அலுவலகத்தை வார விடுமுறைக்காக மூடி அதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மாலை 6.30 மணியளவில் அலுவலகத்தை திறந்த போது அங்கே எனது அறை கதவு உடைக்கபட்டு அங்கிருந்த ஆவணங்கள் சிதைக்கப்பட்டிருந்தன.
அதேபோல இன்னுமோர் அறையும் உடைக்கப்பட்டிருந்தது. லொக்கரும் உடைக்கப்பட்டிருந்தது. சிசிரிவி கெமரா சேவர் திருடப்பட்டிருந்தது. து திருடர்களால் நடாத்தப்பட்டதாக நான் நினைக்கவில்லை காரணம் அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்கான அரிசி மற்றும் ஏனைய நிவாரணப் பொருட்கள் இருந்தன என்றார்.
அதுபோல பெறுமதியான மடிக்கணினி, கெமரா, கணினித் தொகுதி போன்ற பொருட்கள் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், ஆவணங்களை மாத்திரம் திருடி இருக்கிறார்கள். இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
எமது, நிறுவனமானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனநாயக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் போராடுகின்ற அமைப்பு அது மாத்திரம் இல்லாமல் 15 அமைப்புக்கள் கூட்டணியாக இருக்கின்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திக்குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் நான் இருந்து வருகின்றேன் என்றார்.
இது 100 நாள் வேலைத்திட்டமான செயல் முனைவுப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தோம். வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு கெளரவமான நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்ற கோஷமும் இந்த வேலைத்திட்டதில் முன் வைத்துள்ளோம் எனவே இதற்கான அச்சுறுத்தலாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம் என்றார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago