Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தீஷான் அஹமட்
மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரண்டாம் வருட சட்ட பீட மாணவி செல்வி.பஸ்றி ஸீனத்துல் ஹனீயா, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவில் நடைபெறவுள்ள அகில உலக விவாத போட்டியில் பங்கேற்க உள்ளார்.
இவ் விதாதப் போட்டியானது, இந்தியாவிலுள்ள பெங்களூர் பல்கலைக்கழகத்தில் இம் மாதம் 29ஆம் திகதி முதல், ஏப்ரல் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம் மாணவி எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய் கிழமை இலங்கையில் இருந்து இந்தியா பயணமாகிறார். கிழக்கு மாகாணத்தில் இருந்து செல்லும் முதல் மாணவி இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் ,மூதூர் அந் நகார் மகளிர் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவியுமாவார்.
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
42 minute ago
1 hours ago