Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், டிப்பர் வாகனமொன்றும்,முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஹபரனை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நிசாந்த ரணதூங்க என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் நேற்று (24) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்போபுர கித்துல் ஊற்று சந்தியில் திரும்புப் போது, டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளானதில், டிப்பர் வாகன சாரதியை கைது செய்துள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
2 hours ago