Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
தமது பாடசாலைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதருமாறு கோரி கிண்ணியா டி.பி ஜாயா மகளிர் வித்தியாலய மாணவிகள் அங்கு இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தபோது, 'இப்பாடசாலை 1992ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையின் களஞ்சியசாலையாகப் பயன்படுத்தப்பட்டுவந்த பழைய கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றது.
மழை காலத்தில் இக்கட்டடங்களின் கூரைகளிலிருந்து நீர் ஒழுகுவதினால், மாணவர்கள் குடைகளைப் பிடித்தவாறே கற்றல் நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். 'மேலும், இப்பாடசாலைக்கு போதியளவில் கட்டட வசதி, தளபாட வசதி, நூலக வசதி, விஞ்ஞான ஆய்வுகூட வசதி இல்லை' என்றனர்.
இப்பாடசாலையை வேறிடத்துக்கு இடமாற்றம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அருகில் புதிய காணி பெறப்பட்டு கட்டடங்கள் அரசாங்கத்தினால் கட்டப்பட்டுத் தரப்பட்டது. இருப்பினும், அனைத்து வகுப்புகளையும் இங்கு நடத்துவதற்கு கட்டட வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால், குறிப்பிட்ட வகுப்புகள் மாத்திரமே இங்கு நடத்தப்படுகின்றன. இவ்வாறு இரு இடங்களில் ஒரே பாடசாலையை நடத்துவதினால் நிர்வாக விடயங்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர்.
கிண்ணியா நகரத்தில் வசதிக் குறைவுடன் இவ்வாறானதொரு பாடசாலை உள்ளமை கவலை அளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர் தெரிவித்தனர்.
தரம் -11 வரையுள்ள இப்பாடசாலையில் சுமார் 700 மாணவிகள் கல்வி பயிலுவதுடன், 28 ஆசிரியர்களும் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026