Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
கிழக்கு மாகாண சபையால் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்குவதில்லையென மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதின் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று(22) கூடிய போது அவரால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரனை குறித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்று முறையான இடமாற்றக்கொள்கை ஒன்றினை கிழக்கு மாகாண சபை முன்னெடுக்காமையானது பாரிய குறைபாடாகக் காணப்படுகின்றது. முறையான இடமாற்றக் கொள்கையின் பொருட்டு நிபுணத்துவம் வாய்ந்த குழுவொன்றினை கிழக்கு மாகாண சபை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடமாற்றமானது அந்த உத்தியோகஸ்;தரின் நலனுக்கா அல்லது மக்களின் நலனுக்கா என்று பார்க்கப்படுவதில்லை. அதிகாரிகளின் நலனைவிட மக்களின் நலனே பிரதானமானதாக கருதப்படல் வேண்டும்.
இன்று சுகாதாரத் துறை சார்ந்த அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் வேறு துறைகளுக்கு இடமாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் அவசர சேவையின் பொருட்டு பெறப்பட்ட அனுபவங்களும் சேவைகளும் மழுங்கடிக்கப்பட்டு அவை வேறு துறைகளுக்கு பயனற்று செல்லும் அவலம் காணப்படுகின்றது.
இவ்வாறு திண்மக்கழிவு தொழில்நுட்ப அதிகாரிகள் இவ்வாறு வேறு துறைகளுக்கும் இடமாற்றப்பட்டு வருகின்றனர். இவர் மக்களின் வரிப்பணத்தில் வெளிநாடுகளில் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்று வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவது பாரிய இழப்பாகும்' என்றார்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026