2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

அத்துமீறிய 14 மீனவர்கள் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ், பதுர்தீன் சியானா

திருகோணமலை துறைமுகத்தில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் பேரில் 14 மீனவர்கள், இன்று சனிக்கிழமை (6) அதிகாலை இயந்திரப் படகுகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள், திருகோணமலை துறைமுகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகள் முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .